#BREAKING: தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு..!

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த  தடுப்பூசி திட்ட பணியை மோடி தொடங்கி வைத்தார். தற்போது முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் இரண்டு தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு தடுப்பூசி குறித்து தனிநபரோ அமைப்போ அல்லது குழுவோ அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எடுக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வதந்திகளை தடுக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
murugan