சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம் : தவறுக்கு காரணம் கவனக்குறைவல்ல, கருத்தியல் நஞ்சு – சு.வெங்கடேசன் எம்.பி

சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம் குறித்து, சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட். 

சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு ராகுல் காந்தி, ஜோதிமணி எம்.பி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடும் எதிர்ப்பின் பின்னணியில் கேள்வி திரும்பப் பெறப்பட்டது. மாணவர்களுக்கு முழு மதிப்பெண்ணாம். (6.4) தவறுக்கு காரணம் கவனக்குறைவல்ல, கருத்தியல் நஞ்சு. எனவே மதிப்பெண் வழங்கிவிட்டு தப்பிக்ககூடாது. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.