காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் உறுதி …!தமிழகம் சார்பில் பங்கேற்ற எஸ்.கே.பிராபகர் தகவல்

தமிழகத்தின் ஆட்சேபம் கவனத்தில் கொள்ளப்படும் என காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் உறுதி அளித்துள்ளார் என்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற எஸ்.கே.பிராபகர் தெரிவித்துள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கர்நாடக அரசு மேகதாது குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணையை கட்டுவதாக காவிரி ஆணைய வாரிய கூட்டத்தில் கர்நாடகம் வாதிட்டது
இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற எஸ்.கே.பிராபகர் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஆட்சேபம் கவனத்தில் கொள்ளப்படும் என காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் உறுதி அளித்துள்ளார்.மேலும் தமிழகத்தின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment