தொடர் மழை எதிரொலி : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறுகையில்,தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று தெரிவித்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணமே உள்ளது.இதனால் அம்மாவட்ட  ஆட்சியர் ரத்னா அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக அரியலூர் … Read more

#Breaking : 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- அட்டவணை வெளியீடு

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்த தேர்வுகள் நடப்பு ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.அதன்படி , 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது . 8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. … Read more

தினமும் மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தினமும் காலை மாணவ -மாணவிகளுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும். #TNEducation #TNSports — K.A Sengottaiyan (@KASengottaiyan) November 27, 2019   இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

மாணவி தற்கொலை வழக்கு : சிபிஐ விசாரணை கோரிய தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இவரது தற்கொலையில் மர்மங்கள் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து நேற்று  மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.பாத்திமா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் … Read more

இனிமேல் பள்ளிகளுக்கு அருகே விற்கப்படும் நொறுக்குத் தீனிக்கு தடை..!!

காலம்காலமாக பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைகள் அதிகாமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவைகள் பொதுவாக உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதுபோன்ற கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கிறது. அதனால் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி கேன்டின் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகள் குறித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதிலும் பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. … Read more

இனிப்பான செய்தி ! 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு " ஷூ " வழங்க அரசாணை வெளியீடு

6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ” ஷூ ” வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அந்த வகையில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அண்மையில் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.இது மாணவர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று 6-10 ஆம் … Read more

கௌரவ விரிவுரையாளர்களு சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியர் பணி! அரசு தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வையும் கேட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்டமாக தமிழக கலை கல்லூரிகளில் காலியாக உள்ள 647 காலி பணியிடங்களை நிரப்ப அரசு சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறதாம். … Read more

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் – விசாரணை தொடக்கம்

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக  விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் , இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில்  மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக  விசாரணையை தொடங்கியது மத்திய … Read more

ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்பும் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு முடிவுற்றதும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் கூறுகையில், பாடவேளைகளின் இடைவெளியில் குடிநீர் அருந்தினால் உடல்நலம் மேம்படும் என்ற மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ! முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.இதில்  6,491 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள்.  இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.