டிரெண்டாகும் #ShameOnVijaySethupathi..”800″ படத்திற்கு கடும் எதிர்ப்பு.!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi  என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளத்து. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் … Read more

“லிப்ட்” படத்திற்கு நடன பயிற்சியில் தீவிரமாக களமிறங்கிய – கவின்

லிப்ட் படத்திற்கு கவின் தீவிர நடன பயிற்சியில் இறங்கியுள்ளார், அதற்கான புகைபடம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின், தற்போது லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார். கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. … Read more

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் டி.ராஜேந்தர்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் டி.ராஜேந்தர். நவம்பர் 22-ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்  நடைபெறுகிறது.வருகின்ற 16-ஆம் தேதி இதற்கான வேட்பு மனுதாக்கல்  தொடங்குகிறது. தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில்  அம்மா கிரியோசன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் நவம்பர் 22-ஆம் தேதி சென்னையில்  நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும், மன்னன் பிலிம்ஸ் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். இவர்களது அணியில் … Read more

அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட டாஸ்க்!

அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட டாஸ்க் ஒன்று இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வந்து ஒன்றரை வாரங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு நடக்கக்கூடிய நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக சில விளையாட்டுகள்  வைக்கப்பட்டு அதில் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை வைத்து உள்ளே இருக்க வாய்ப்புகள் அளிக்கப்படும். இதற்காக தற்போது புதிய விளையாட்டு ஒன்று இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் அடுத்த வார … Read more

மக்களின் மனிதநேய பலங்கள் மற்றும் பலவீனங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன்- ஸ்ருதி ஹாசன்

2020-ஆம் ஆண்டில் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 2019 ஆண்டை நான் திரும்பிப் பார்க்கிறேன், உங்களை வெறுக்க விரும்பவில்லை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த ஆண்டு வாழ்க்கை மற்றும் மக்களின் மனிதநேய பலங்கள் மற்றும் பலவீனங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன். நான்  இயற்கையாகவே தனிமையானவள், உண்மையிலேயே மக்களை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பதையும் கற்றுக்கொண்டேன். நான் கலை பற்றியும், … Read more

நீங்க என்னைய தான் சொல்றிங்கன்னு பச்சையா தெரியுது!

நீங்க என்னைய தான் சொல்றிங்கன்னு பச்சையா தெரியுது என சுரேஷிடம் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்று அனைவரும் குழுவாக சேர்ந்து என்னை ஒதுக்குகிறீர்கள் என சுரேஷ் அவர்கள் கூறியது ரியோவுக்கு கடும் கோபத்தை எழுப்பி வாக்குவாதத்தை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று நீங்கள் யாரை அப்படி சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் சொல்வதிலேயே என்னை தான் சொல்கிறீர்கள் என பச்சையாக தெரிகிறது என கூறியுள்ளார். … Read more

ஏய்ய்…. சின்ன மச்சான் , அனிதாவும் சுரேஷ் சாரும் கலக்கல் நடனம்!

பிக்பாஸ் வீட்டில் இன்று அனிதா சம்பத்தும் சுரேஷ் அவர்களும்  சின்ன மச்சான் எனும் பாடல் அட்டகாசமாக இணைந்து நடனம் ஆடுகிறார்கள். இன்றுடன் பத்தாவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாகவே அனிதாவுக்கு சுரேஷுக்கும் இடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அவை அனைத்தும் காணாமல் போயுள்ள வண்ணமாக இருவரும் சேர்ந்து கலக்கலாக ஏ சின்னமச்சான் எனும் பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ,   View this post … Read more

சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது – சூரியை தாக்கும் விஷ்ணு விஷால் காதலி!

சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது என சூரியை விஷ்ணு விஷால் காதலி மறைமுகமாக தாக்கியுள்ளார். நடிகர் சூரி அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களைக் கொடுத்து விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றிவிட்டதாக அண்மையில் சூரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்து இருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிண்டன் வீராங்கனையுமாகிய ஜூவாலா காட்டா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த சமுதாயம் நியாயமற்றதாக மாறியுள்ளதாகவும், ஒருவரது … Read more

பொறாமைக்காரர்கள் விஷம் கக்குகிறார்கள்! கடுப்பான நடிகை சஹானா! எதற்காக தெரியுமா?

நடிகை நஸ்ரியா வாங்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள கார்.  நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில், நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியா கடந்த 2014-ல் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள ‘போர்ஷே 911’ என்ற சொகுசு  காரை வாங்கிய நிலையில், அதனை இணையத்திலும் வெளியிட்டனர். இந்நிலையில், பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், … Read more

முத்தையா முரளிதரனாக அசத்தும் விஜய் சேதுபதி.. வெளியானது “800” படத்தின் மோஷன் போஸ்டர்!

முத்தையா முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் “800” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தவர், நடிகர் விஜய் சேதுபதி. இவர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” … Read more