தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் டி.ராஜேந்தர்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் டி.ராஜேந்தர்.

நவம்பர் 22-ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்  நடைபெறுகிறது.வருகின்ற 16-ஆம் தேதி இதற்கான வேட்பு மனுதாக்கல்  தொடங்குகிறது. தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில்  அம்மா கிரியோசன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 22-ஆம் தேதி சென்னையில்  நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும், மன்னன் பிலிம்ஸ் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். இவர்களது அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .