ஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய பிரபல நடிகர்!

ஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய நடிகர் உன்னி முகுந்தன்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிற நிலையில், கேரளாவில், பிரபல நடிகரான உன்னி முகுந்தன் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கலுக்கு 30 ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கி … Read more

தனது குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி இறந்து விட்டாரே.! மீண்டும் சோகத்தில் ஆழத்திய செய்தி.!

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா 4மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா ‘Vayuputra’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ராஜமார்தாண்டா, ஏப்ரல், ரணம் உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இவர் ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் பிரபலமான மேக்னா ராஜ் என்பவரை 2018ல் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும், துருவ் சார்ஜா … Read more

கொரோனாவால் உயிரிழந்த கமல் பட தயாரிப்பாளர்.!

கமல் நடிப்பில் வெளியான ‘ராஜ்திலக்’ என்ற படத்தினை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. அதில் சினிமா பிரபலங்களும் அடங்கும். இந்த நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கமல் நடித்த ‘ராஜ்திலக்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் என்பது … Read more

பிரபல நடிகையான மேக்னா ராஜின் கணவரும், ஆக்ஷன் கிங்கின் மருமகனுமான பிரபல கன்னட நடிகர் மரணம்.!

மேக்னா ராஜ் அவர்களின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 2010ஆம் ஆண்டு காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மேக்னா ராஜ். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகரான ஜெர்ரி நடித்திருந்தார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை இன்றைய காலகட்டத்திலும் அனைவரது பேவரட்டாக உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடிக்கா விட்டாலும், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து … Read more

திரில்லர் கலந்த “A” படத்தின் டிரைலர்.!

 தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் “A” படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவந்திகா புரொடக்ஷன் வழங்கி கீதா மின்சாலா தயாரிக்கும் தெலுங்கு படம் “A” (AD INFINITUM). இந்த படத்தை உகந்தர் முனி இயக்குகிறார். இந்த படத்தில் நிதின் பிரசன்னா, ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரவீன் கே. பங்கரி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஜய் குரகுலா இசையமைத்துள்ளார். சமீபத்தில் திரில்லர் கலந்த இந்த படத்தின் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் … Read more

சூப்பர் ஸ்டார் கடவுள், அப்போம் தளபதி.? பிரபல நடிகை டூவிட்.!

பிரபல பாலிவுட் நடிகையிடம் சூப்பர் ஸ்டார்,தளபதி மற்றும் சூர்யா குறித்து கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா. இவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். இவர்கள் அனைவருமே பாலிவுட் முதல் டோலிவுட் வரை பிரபலம். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திலும், தளபதி விஜய் மாஸ்டர் படத்திலும் மற்றும் சூர்யா அவர்கள் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார். … Read more

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்!

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார். இசை இரட்டையர்களாக வாஜித் – சாஜித் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இரட்டையர்களில் வாஜித் (42) என்பவர், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இந்த இரட்டையர்கள் இருவரும் கடந்த ஆண்டு, சல்மான்கான் நடிப்பில் வெளியான டபாங் 3 என்ற படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில், வாஜித் என்பவர், இசையமைப்பாளர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் ஆவார்.  இந்நிலையில், வாஜித் கான் சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் … Read more

இயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் – பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்

பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘வெற்றிமாறனின் அசுரன் பார்த்தேன். … Read more

பிரபல நடிகை விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகை மெபியானா மைக்கேல் விபத்தில் மரணம். நடிகை மெபியானா மைக்கேல் பிரபலமான கன்னட தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான மடிகேரிக்கு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களின் வாகனம் எதிர்பாராத விதமாக தேவிஹள்ளி அருகே வந்துகொண்டிருந்த டிராக்டரில் மோதியது.  இதனையடுத்து, மெபியானா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், நடிகை மெபியானா-வுக்கு பாதிப்பு பலமாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி … Read more

பிரபல இந்தி நடிகரை தாக்கிய கொரோனா!

பிரபல இந்தி நடிகரை தாக்கிய கொரோனா. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் சுசிலா பிரபலங்களுக்கு பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல இந்தி நடிகரான கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கிரண்குமார் அவர்கள் கூறுகையில், எனக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. ‘கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன்.  அப்போது ஆஸ்பத்திரியில் … Read more