பிரபல இந்தி நடிகரை தாக்கிய கொரோனா!

பிரபல இந்தி நடிகரை தாக்கிய கொரோனா!

Default Image

பிரபல இந்தி நடிகரை தாக்கிய கொரோனா.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் சுசிலா பிரபலங்களுக்கு பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல இந்தி நடிகரான கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கிரண்குமார் அவர்கள் கூறுகையில், எனக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. ‘கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன்.  அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கொரோனா சோதனை அங்கு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எனவே எனக்கும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், எனக்கு எந்த நோய் அறிகுறிகளும் அப்போது இல்லை. இப்போதும் இல்லை என்றும், காய்ச்சல், சளி எதுவும் இல்லை. நான் நலமாக உள்ளேன் என்றும், வீட்டில் நானே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், வருகிற 26 அல்லது 27-ந் தேதி 2-வது சோதனை மேற்கொள்ளப்படும் என்றும்,  அப்போது நான் முற்றிலுமாக குணமடைவேன் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

Join our channel google news Youtube