கொரோனாவால் உயிரிழந்த கமல் பட தயாரிப்பாளர்.!

கொரோனாவால் உயிரிழந்த கமல் பட தயாரிப்பாளர்.!

Default Image

கமல் நடிப்பில் வெளியான ‘ராஜ்திலக்’ என்ற படத்தினை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. அதில் சினிமா பிரபலங்களும் அடங்கும். இந்த நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கமல் நடித்த ‘ராஜ்திலக்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கடந்த 2ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக மும்பையில் உள்ள 2 மருத்துவமனையில் அனுமதிக்க முயற்றித்ததாகவும், ஆனால் மருத்துவமனையில் இடமில்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இவரது இறுதி சடங்கில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு 4 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அனில்சூரியின் சகோதரரான ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி பாலிவுட் திரையுலகினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Join our channel google news Youtube