உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்!

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்!

Default Image

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்.

இசை இரட்டையர்களாக வாஜித் – சாஜித் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இரட்டையர்களில் வாஜித் (42) என்பவர், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இந்த இரட்டையர்கள் இருவரும் கடந்த ஆண்டு, சல்மான்கான் நடிப்பில் வெளியான டபாங் 3 என்ற படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில், வாஜித் என்பவர், இசையமைப்பாளர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் ஆவார். 

இந்நிலையில், வாஜித் கான் சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு, பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Join our channel google news Youtube