சிறைக்குள் கஞ்சா கடத்திய பூனை கைது – பனாமா சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பூனை பனாமாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் பனாமா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா மற்றும் கோக்கைன் கடத்தப்படுவது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. பனாமா நகரத்தின் காளான் மாகாணத்தில் உள்ள நியூஷா எஸ்பெரான்ஷா எனும் சிறைச்சாலை மிகுந்த பாதுகாப்பு நடைமுறைகள் கொண்ட சிறைச்சாலையாம். இங்கு 1800 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனராம். ஆனால் இந்த சிறைச்சாலைக்குள்ளேயே கஞ்சா மற்றும் கோகைன் ஆகியவை கைதிகளுக்கு இடையே பரிமாறப்பட்டு வந்துள்ளது.

எவ்வாறு சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் நடமாடுகிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் மனிதர்கள் மூலமாக அந்த கஞ்சா  கடத்தப்படவில்லை என தெரிந்து சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இரவு நேரத்தில் சிறைச்சாலையின் சுவரோரமாக பூனை ஒன்று கழுத்தில் துணி ஒன்றை கட்டியபடி வந்துள்ளது. அந்த பூனையை பிடித்து அதன் கழுத்தில் உள்ள துணியை விரித்துப் பார்த்த பொழுது பூனையின் கழுத்தில் இருந்த துணியில் தைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மற்றும் கோகைன்  உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்துள்ளது.

இதனையடுத்து போதைப் பொருள் கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த பூனை கைது செய்யப்பட்டதுடன் விலங்குகள் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஞ்சா பொருள் கடத்த கூடிய மனிதர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அமெரிக்காவில் பூனை கைது செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து தெரிவித்துள்ள சிறைத்துறை அதிகாரி விலங்குகள் மூலமாக போதைப்பொருள் இந்த சிறைச்சாலையில் கடத்தப்படுவது இது முதல்முறை அல்ல எனவும், இதற்கு முன்பதாகவே புறா மற்றும் டிரோன்கள் மூலமாக போதைப்பொருட்கள் சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் ஆனால் இம்முறை பூனை வைத்து கஞ்சா பொருள் கடத்தப்படுவது புதிய டெக்னிக்காக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal