மதவாத கட்சியாக செயல்பட அனுமதிக்க முடியாது – முதல்வர்

பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் உரை.

சென்னையில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேரவையின் 81-வது மாநாட்டில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான் ஆனால் பழமைவாதிகள் அல்ல, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் தான் பழம்பெருமைகளை நாங்கள் பேசுகிறோம்.

மதசார்பற்ற, அறிவியல்பூர்வ வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறது இந்திய வரலாற்று பேரவை. அறிவியல் பார்வை உருவாக்குவது தான் இன்றைய காலத்தின் அவசியம். பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும். மதங்களிடையே பிரிவினையை தூண்டும் சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வரலாற்று திரிபுகள் தான் நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment