வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்  மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 04-ஆம் தேதியும், வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 5 -ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் 7-ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் சனிக்கிழமையும் (ஜன 29) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.  வேட்புமனு தாக்கல் நாளை காலை தொடங்கி, பிப்ரவரி 4ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்