இன்று அதிகமானோருக்கு, மிக சிறிய வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு நாம் மருத்துவம் பார்ப்பதற்கென்று பல கோடிகளை செலவு செய்திருக்கலாம். எந்த ஒரு பிரச்சனைக்கும் செயற்கையான முறையில், மருத்துவம் செய்வதை விட, இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதே சிறந்தது.

தற்போது இந்த பதிவில் வழுக்கை விழுந்த இடத்தில முடி வளருவதற்கான சில இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

வெங்காயம்

வெங்காயம் நமது அனைவருடைய இல்லத்திலும் இருக்கக் கூடிய ஒன்று. வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை கலந்து, தலையில் முடி இல்லாத இடத்தில நன்கு தடவ வேண்டும்.

அதன்பின், 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முடி இல்லாத இடங்களில் நன்கு முடி வளரும்.

இளநீர்

இளநீரில் உள்ள வெள்ளை பகுதியினை எடுத்து, நன்கு அரைத்து அதனைச்சாரு பிழிந்து, அந்த சாற்றினை தலையில் முடி இல்லாத இடத்தில் நன்கு படும்படி தேய்க்க வேண்டும். அதன் பின் 30 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூக்களை எடுத்து, நன்கு அரைத்து அதன் சாற்றினை, தலையில் பூச வேண்டும். அதன்பின் சிறிது நேரம் கழித்து, தலையை தண்ணீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், வழுக்கை உள்ள இடங்களில் அடர்த்தியாகவும், கருமையாகவும் முடி வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here