ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி (இதே நாளில்)ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.இதில்  மரணம் அடைந்த  13 பேருக்கு இன்று முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  ஸ்டெர்லைட் போரட்டம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதை எதிர்த்து மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது.குற்றவியல் சட்டம் 107 மற்றும் 111 பிரிவுகளில் கீழ் அனுப்பிய சம்மன் மீது முடிவெடுக்கக் கூடாது. புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை எனும் போது அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? என்றும் அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Comment