குத்துச்சண்டை ரிங்கின் உடை என்னவாக இருக்கும் என்று யாராவது விளக்க முடியுமா? – மேரி கோம்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,கடைசி நேரத்தில் தனது ஜெர்சியை மாற்ற வற்புறுத்தியது ஏன் என்று மேரி கோம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடைபெற்ற  மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், டொமினிகா குடியரசின் மிக்குவேலினாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம்,முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார்.

இதனையடுத்து,நேற்று நடைபெற்ற 48 – 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம்,கொலம்பியாவின் இங்க்ரிட் வாலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,மேரி கோம் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினார்.இருப்பினும்,3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தி விக்டோரியா வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,மேரி கோம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில்,போட்டியின்போது கடைசி நேரத்தில் தனது ஜெர்சியை மாற்ற வற்புறுத்தியது ஏன் என்று மேரிகோம் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜெர்சியில் பெயரின் முதல் பகுதி மட்டுமே இடம் பெற வேண்டும் என்றும்,அதன்படி மாங்டே சுங்நீஜங் என்ற பெயரின் முதல் பகுதிக்கு பதிலாக மேரி கோம் என இருந்ததை காரணம் காட்டி ஜெர்சியை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

என்னவாக இருக்கும்:

“காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நுழைவதற்கு முன்னர், நான் அணிந்திருந்த ஜெர்சிக்கு பதிலாக வேறு ஜெர்சியை மாற்றுமாறு தெரிவித்தார்கள்.இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.குத்துச்சண்டை ரிங்கின் உடை என்னவாக இருக்கும் என்று யாராவது விளக்க முடியுமா?”,என்று பதிவிட்டுள்ளார்.

நடுவர்களின் முடிவு:

மேலும்,மேரி கோம் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில்,”நான் குத்துச்சண்டை வளையத்துக்குள் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.என்னை அவர்கள் ஊக்க மருந்து பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது கூட நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.சமூக ஊடகங்கள் மற்றும் எனது பயிற்சியாளர் என்னிடம் கூறியபோதுதான் நான் தோல்வியுற்றது எனக்கே தெரிந்தது.இன்கிரிட் வாலென்சியாவை நான் கடந்த காலங்களில் இரண்டு முறை வென்றிருக்கிறேன்.

இந்த நிலையில்,இப்போட்டியில் வாலென்சியாவை வெற்றியாளராக நடுவர்கள் அறிவிப்பார்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” இதை என்னால் நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.ஏனெனில்,நடுவர்களின் முடிவை எதிரித்து நம்மால் ஏதும் செய்ய முடியாது.போராட்டமோ,நடுவர்களின் முடிவினை எதிர்ப்பதோ கூடாது என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.இதனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை”,என தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப,ஒலிம்பிக் தூதர் தனது பொறுப்பை ராஜினமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

மத்திய அமைச்சர்:

இதற்கிடையில்,இதுதொடர்பாக,மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மேரி கோமே வெற்றியாளர் என நம் அனைவருக்கும் தெரியும்.ஆனால்,நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தமளிகிறது”,என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் லெஜண்ட்:

மேலும்,மற்றொரு பதிவில்,”அன்புள்ள மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்கில் நீங்கள் ஒரு புள்ளியில் தோல்வியடைந்தீர்கள், ஆனால் எனக்கு நீங்கள் எப்போதும் ஒரு சாம்பியன்!உலகில் வேறு எந்த பெண் குத்துச்சண்டை வீரரும் அடையாததை நீங்கள் சாதித்துள்ளீர்கள்.நீங்கள் ஒரு லெஜண்ட். இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது
குத்துச்சண்டை & ஒலிம்பிக்ஸ் உங்களை இழக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.

மேரி கோம் கடந்த மே 21 ம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியை வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டார்.மேலும்,மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.