#BREAKING : சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…!

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, 10,11-ஆம்  வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30%, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள்  வெளியிடப்பட்டுள்ளது. www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த  பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், மதிப்பெண்களின் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.