#BREAKING : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான்,மேற்கு வங்க மாநில சட்டமன்றங்களில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.அதில்,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.பின்னர் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக புறக்கணித்தனர்.பாஜக வெளிநடப்பு செய்தது .மக்கள் பிரச்சனைகளை குறித்து விவாதிக்காமல் அரசியல் நோக்கத்தோடு கூட்டப்பட்டதாக குற்றச்சாட்டினர்.ஆனால் புதுச்சேரி  துணைநிலை ஆளுநா் கிரண் பேடி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று தெரிவித்தார்.தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் எதிர்ப்பையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு.

Recent Posts

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

3 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

27 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

29 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

35 mins ago

ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…

38 mins ago

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத் ? பெங்களுரூவுடன் இன்று பலபரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…

2 hours ago