தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த  12 ஆயிரம் கோடி ரூபாய்!

முதல்கட்டமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த  செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கத் தக்க வகையில், தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகையாக நபருக்கு 900 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்படும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகள் இந்த காப்பீட்டின் கீழ் வழங்கப்படும்.

எனினும் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறிது காலம் பிடிக்கும் என்பதால் முதல் சில ஆண்டுகளில் காப்பீடு கோருவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றும் எனவே எதிர்ப்பார்த்ததை காட்டிலும் குறைவான தொகையே செலவாகும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment