#Breaking:மாணவர்களே ரெடியா…திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது.அதே சமயம்,தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை மறுநாள்(ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாலும்,இறுதி முடிவுகளும் தயாராகவுள்ளதாலும் திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இதனிடையே,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து,பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment