#BREAKING: ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்.. கட்சி தலைவர் ஓபிஎஸ் தான் – செல்வராஜ்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல் என ஆணைய கூட்டத்துக்கு பிறகு கோவை செல்வராஜ் பேட்டி.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். இபிஎஸ் தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்திருந்த நிலையில், கோவை செல்வராஜ் பக்கம் இருந்த அதிமுக பெயர் பலகையை தங்கள் பக்கம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடுத்து வைத்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.

இந்த நிலையில், ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்ததால், அதிமுக சார்பில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு, எண்களின் கருத்துக்களை எடுத்து கூறினோம். அப்போது, 18 வயது பூர்த்தியான பிறகு தான் வாக்களிக்க முடியும், அதுவரை பெயர்களை சேர்ப்பதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக கூறினார். மலைவாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் வாக்குச்சாவடி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த கூட்டம் சிறப்பான கூட்டமாக அமைந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சார்பாக அதிமுக என்பது ஒரே இயக்கம் தான் வேறு யாருக்கும் சொந்த கிடையாது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 1-12-2021 ல் எடுத்த தீர்மானத்தின்படி, கட்சி தலைமைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் இருக்கிறார்கள். வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை, அதனால் இடைப்பட்ட காலத்தில் நடந்த கூத்துகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை. இதனால் கட்சியின் தலைவர் ஓபிஎஸ் தான். நாங்கள் தகவலறியும் சட்டம்படி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி, திரும்ப வங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் அவர் பெயரில் தான் கட்சி உள்ளது என குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்ப வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசி கொண்டிருப்பார். தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை தவிர்த்து வேறு எங்கு இருக்கிறது என சொல்ல சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

தரமில்லாத செயல்பாடுகளை செய்பவர்களை தரமான மனிதர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆணைய கூட்டத்தில் அதிமுக பெயர் பலகையை தன் பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்ட ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல். அமைச்சர், எம்எல்வாக இருந்த அவருக்கு இது கேவலமாக இல்லையா என்றும் அவர் முதல் அதிமுகவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும், ஓபிஎஸ் அனுப்புற ஒரு ஆள் வந்தாலே போதும், அந்த மாதிரி டப்பா பசங்கயெல்லாத்தையும் அடக்கிருவோம் என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோவை செல்வராஜ் பதிலளித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment