#BREAKING: மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்!

மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.

தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 10 ஆம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியை பாடம் நடத்தும் முறையை முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கவனித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து அரசுப் பள்ளியில் சமயலறை உள்ளிட்ட இடங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கட்சி சார்பற்ற முறையில் எம்பி, எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டறிந்தால் ஆட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment