#Breaking:”இனி மாலையிலும் உழவர் சந்தை” – வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

2022-23- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  அதில்,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.அந்த வகையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக,உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில்,மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்படவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில்,உழவர் சந்தைகள் இனி மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும்,புதிய உழவர் சந்தைகள் அமைக்க ரூ.10 கோடி நிதியும்,ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 50 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.