#BREAKING: ரஷ்ய வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவிப்பு!

உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் மோசமான சூழ்நிலை இனிமேல்தான் ஏற்படப்போகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்ய அணு ஆயுத பிரிவை தயார் நிலையில் வைக்கும்படி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா நிகழ்த்திய குண்டு வெடிப்புக்கு அடுத்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் எட்டாததால் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பக்கத்தில் இருந்தும் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடும் விதமாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் படைகள் முடிந்தவரை போராடி வருகிறது. உக்ரைன் அதிபரும் ராணுவ படைகளுடன் சேர்ந்து நாட்டிற்காக போராடி வருகிறார். மிகப்பெரிய படைகளை வைத்துள்ள ரஷ்யாவை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ அமைப்பை சேர்ந்த நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே போரால் உலக நாடுகள் மூன்றாம் உலக போரை எதிர்கொள்ள உள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. தொடர் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யா வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 33 போர் விமானம், 37 ஹெலிகாப்டர், 217 பீரங்கிகள், 939 பாதுகாப்பு கவச வாகனங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்