#BREAKING: புதுச்சேரி ஜிப்மரில் 26ல் முதல் O.P பிரிவு இயங்காது – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரம் 26ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிப்பு.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்றுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அதிதீவிர சிகிச்சையும், உயர் அழுத்த பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் அந்த நோயாளிகளை கவனிக்க தேவைப்படுகிறாரகள் என கூறியுள்ளனர்.

எனவே, கொரோனா நோயாளிகளை பாதுகாக்கவும் வெளிப்புற நோயாளி பிரிவிற்கு வரும் கொரோனா இல்லாத நபர்களை பாதுகாக்கவும், தொற்று பரவலை தடுக்கவும் வரும் 26ஆம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்துவித நேரடி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு (O.P) தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். மேலும், அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்