#BREAKING : ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது

  • சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது.
  • ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் ,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6-ஆம் தேதி )காலை 10 மணிக்கு தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது  குறித்து இன்று ( 6-ஆம் தேதி) நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில்  இன்று 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.