#BREAKING: எங்கள் கட்டுப்பாட்டிலேயே தலைநகர் கீவ் உள்ளது – உக்ரைன் அதிபர்

தலைநகர் கீவ் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாகவும் காணொலி வாயிலாக பேசிய அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் போரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏனெனில் ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தான் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக போராடுவதற்கு உக்ரைன் பொதுமக்கள் தயாராக இருந்தால், யார் வேண்டுமானாலும் முன்வரலாம், அவர்களுக்கு ஆயுதங்களை கொடுக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போராட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தயாரா இருக்கிறோம். நாட்டிற்காக யாராவது போராட இருந்தால், அவர்கள் முன்வந்து ஆயுதங்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்,

இதனிடையே, ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நிலையில், உக்ரைன் மக்கள் வெளியேறி வருகின்றனர். தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சுமார் 1 லட்சம் மக்கள் போலந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகள் அனைத்தும் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்