#BREAKING: ஒரே சமயத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தும், புதிய அதிகாரிகளை நியமித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் உள்ள 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப் வி பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யாக ஜெயராம், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக தினகரன், ஆயுதப்படை ஐஜியாக லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ப.மூர்த்தி, மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்