#BREAKING: நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சி – தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 272 உயர்வு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,834க்கு விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசு உயர்ந்து ரூ.71.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 272 ரூபாய் அதிகரித்திருப்பது நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று உயர்ந்துள்ளது. இதுபோன்று சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 5199க்கும், 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 4,1592க்கும் விற்பனையாகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்