#BREAKING : ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் – உக்ரைன் கோரிக்கை

உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என  அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியுள்ளது. 

நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும், பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில்,அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார். இந்த நிலையில்,  உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை நாட்டின் கோமல் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என  அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.