#BREAKING: ரூ.21,000 கோடி நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர் கோரிக்கை!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாட்டு முக்குதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் சந்தித்திருந்தார், இந்த சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி நிலவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடி நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடியில், ஜிஎஸ்டி நிலுவை தொகை மட்டும் ரூ.13,504.70 கோடி இருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் காலம் ஜுனுடன் முடிந்தாலும் மேலும் 2 ஆண்டுக்கு வழங்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி உள்பட 16 திட்டங்களுக்கான தமிழகத்துக்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நிதியமைச்சருடன் நேரில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்