#BREAKING : ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

  • பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
  • ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன், அப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கடந்த மே 24-ஆம் தேதி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், போலீசார் 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்த நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

author avatar
murugan