#Breaking: மிஷன் 2024 – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார்.

அண்மையில் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருந்த நிலையில், தற்போது ராகுல்காந்தியை சந்தித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இதில் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட்டார்.

ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், தனது குடும்பத்துடன் செலவிட போவதாகவும், அதனால் ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்று பிரசாந்த் கிஷோர் தரப்பு தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது.

அதாவது, மிஷன் 2024 எனப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில், ராகுல்காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டால், காங்கிரஸுடன் இணைந்த பணியாற்றுவேன் என பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்