#BREAKING :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்-வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  இன்று டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பு முடிவு :

மொத்த இடங்கள் : 70 

 ஆம் ஆத்மி – 44 இடங்களில் வெற்றிபெறும்.

பாஜக-26 இடங்களில் வெற்றிபெறும்.

காங்கிரஸ் – ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ரிபப்ளிக் கருத்து கணிப்பு முடிவு:

ஆம் ஆத்மி கட்சி – 48-61 இடங்களில் வெற்றிபெறும்.

பாஜக – 9-21 இடங்களில் வெற்றிபெறும்.

காங்கிரஸ் – 0 -1 இடங்களில் வெற்றிபெறும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு முடிவு:

ஆம் ஆத்மி கட்சி– 50-56 இடங்களில் வெற்றிபெறும்

பாஜக – 10 – 14 இடங்களில் வெற்றிபெறும்

காங்கிரஸ் – ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.