#BREAKING : சபாநாயகருக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது…! – உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என்று கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், சபாநாயகர் கடைபிடிக்கும் நடைமுறைகள் சரியானதாக தான் இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து, லோகநாதன் அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.