#Breaking:பத்திரப்பதிவில் ‘ஒரே நாடு ஒரே பதிவு’ முறை – மத்திய நிதி அமைச்சர்!

டெல்லி:நில சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாக பத்திரப்பதிவில் ‘ஒரே நாடு,ஒரே பதிவு’ என்ற நடைமுறை  கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்(காதிதமில்லா டிஜிட்டல் முறையில்) இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில்,நில சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு,ஒரே பதிவு என்ற நடைமுறை  கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும்,நிலப் பதிவேடுகளில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான மேலாண்மைக்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை ஏற்றுக்கொள்வதற்கு தொடர்பாக மாநிலங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும்,இதற்காக நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி, குடிநீர் இணைப்பு, வீட்டு வசதி மற்றும் டிஜிட்டல் கரன்சி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

 

 

author avatar
Castro Murugan