#BREAKING: கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு.

வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சக்திகாந்த தாஸ், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் (ரெப்போ) 4% ஆக தொடரும் என்றும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றமிருக்காது எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், 11-வது முறையாக வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும் வங்கிகள் வைத்துள்ள வைப்புத்தொகைக்கு ஆர்பிஐ தரும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35% லிருந்து 3.75% ஆக உயர்கிறது என்றும் கூறினார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5.7% ஆக உயரும், முன்பு பணவீக்கம் 4.5% இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்