#BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி.!

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து, முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது, முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.  இதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி சட்ட பேரவையில் இருந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார்.

சட்ட பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதனிடையே, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்எல்ஏ ஒருவரது ராஜினாமாவால் நெருக்கடியில் சிக்கிய காங்கிரஸ் அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து, முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்