BREAKING: முதல்வருடன் மோடி பேச்சு.! ரேபிட் கிட் வழங்க முதல்வர் கோரிக்கை .!

தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர்  பழனிசாமியிடம் தொலைபேசி மூலம்  கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமி விளக்கம் கொடுத்தார்.

தொலைபேசி மூலம் பேசும்போது, தமிழகத்திற்க்கு கூடுதலாக ரேபிட் கிட் வழங்க முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று ரேபிட் கிட் வழங்குவதாக மோடி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5 வது இடத்தில் உள்ளது. நேற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு 12,000 ரேபிட் கிட் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan