#BREAKING: கோடநாடு விவகாரம் – கூடுதல் விசாரணைக்கு தடையில்லை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த காவல்துறைக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் கோடநாடு வழக்கை செப் 2ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தியிருந்தது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்றும் தாமதமானாலும் உண்மையை கண்டறிவதில் கூடுதல் விசாரணை உதவியாக இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்து, கோடநாடு வழக்கை மேற்கொண்டு விசாரிக்க கூடாது என்று கோவையை சேர்ந்த அபினவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணங்களை ஏற்பதா? வேண்டாமா என்பதை நீலகிரி நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், செய்யாவிட்டாலும் காவல்துறை கூடுதல் விசாரணை நடத்தலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்