#BREAKING : 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் – பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பேரறிவாளன் மனு மீதான காரசார வாதம் 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறுகையில் பேரறிவாளன் விவகாரம் தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் போது தமிழக அரசு முடிவெடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அரசு விடுதலை செய்ய வேண்டும். சிறை விதிகளுக்குள்பட்டு பரோல் வழங்கலாமே தவிர ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் முடிவெடுக்க முடியாது 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேரறிவாளன் தரப்பில் கூறுகையில், அதிகாரம் பற்றி பிறகு விசாரிக்கிறோம் இப்போது ஜாமீன் பற்றி விசாரிக்கலாம். மூன்று முறை பரோல் வழங்கப்பட்ட போதும் விதிகளுக்குட்பட்டு தன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் மேலும் தாமதம் செய்வது எப்படி? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு சலுகை எப்படி ஏற்பது என்று மத்திய அரசு தரப்பில் கேள்வி கேட்கபட்டது. அதற்கு தண்டனை குறைப்பு என்பது உச்சநீதிமன்றம் தான் வழங்கியது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

இந்த நிலையில் , பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.