#BREAKING: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடை சட்டம் செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் (PMLA) செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் முக்கியமான சட்டப்பிரிவுகளை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம். அதன்படி, சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் யாரையும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் உடனே கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதி தெரிவித்தார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக மெகபூபா, கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment