#BREAKING: மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை.!

தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு என நேற்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்றும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவில் அனைத்து கட்சியினரும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என தெரிவித்தனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்