#BREAKING : திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்.!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.சமீபத்தில், அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

 பின்னர், அவரது உடல் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வந்தது.  இதைத்தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன் அன்பழகன் உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,  இன்று காலை 8.05 மணி அளவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். இன்று ஜெ.அன்பழகனின் 62-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan