#BREAKING: அமோக ஆதரவு.. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் வலியுறுத்தினார்கள் என ஜெயக்குமார் பேட்டி.

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒன்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் என அனைவரும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என்றும் வலியுறுத்தினார்கள். இதனடிப்படையில் ஒன்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும்.

இதை பற்றிய கருத்து இன்று விவாதிக்கப்படவிலை. காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு, இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் பொதுவாக எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்பது தான். காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில், இன்றைக்கு விவாதிக்கப்பட்டது. இதற்கு அமோகமான ஆதரவை தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு அழிவு என்பது கிடையாது. சசிகலா குறித்து எதற்கு விவாதிக்க வேண்டும்?, கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர் சசிகலா. ஆகவே, கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment