#BREAKING: ஊரடங்கு தளர்வுகள் – கல்லூரிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி?

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்று வரும் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி என்றும் தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடற்கரையில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்