#BREAKING: அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிந்துரை.!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய  3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தபின், டெல்லி மட்டும் அல்ல, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்