கர்நாடகாவில் 24×7 ஹோட்டல், கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி.!

கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி,
கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட் 10 மணி நேரத்தை தாண்டக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியரை ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்றும் மாநில அரசு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது ஒரு வார விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்றும் ஒரு ஊழியரை ஒரு நாளில் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யச் செய்தால், அவர்களுக்கு கூடுதல் சம்பளத்தை வழங்கப்பட வேண்டும் எனவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 1962 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்