கர்நாடகாவில் பதிவான முதல் ஜிகா வைரஸ்! 5 வயது சிறுமி பாதிப்பு.!

கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் சுதாகர் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் … Read more

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.! காவலர் மற்றும் அவரது மனைவி அகால மரணம்..!

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் காவலர் மற்றும் அவரது மனைவி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்துள்ள இரண்டு பேர்  சிந்துகி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அவரது மனைவி … Read more

#Breaking: மேகதாது அணையை கட்டியே தீருவோம் – கர்நாடகா பிடிவாதம்

மேகதாது அணையை காட்டியே தீருவோம் என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே … Read more

ஆபாச வீடியோ விவகாரம் – கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா.!

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அவருக்கு ஆசை காட்டி தவறு செய்ததாக கூறப்படும் பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது குற்றசாட்டு இருந்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வீடியோ … Read more

துப்பாக்கி முனையில் கொள்ளை – வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது.!

முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் கொள்ளையில் ஈடுபட குற்றவாளிகளை ஐதராபாத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று காலை ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று, ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டன. பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த 6 பேர் … Read more

கர்நாடகாவில் 24×7 ஹோட்டல், கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி.!

கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று … Read more

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து!

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது. இந்நிலையில்,  கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடம்!

இந்தியாவை பொறுத்தவரையில்,  குற்றம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும், இதனை பயன்படுத்தி சிலர் மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில்  44,456 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் 12,020 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக உத்திரபிரதேசத்தில் 11,416 வழக்குகளும், … Read more

பெங்களூரு கலவரம்! துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நவீனை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பிய நிலையில், திடீரென சீனிவாசமூர்த்தியின் வீடு … Read more

கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி நியமனம்!

கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி நியமனம். கர்நாடக அரசு உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை, பணியிடமாற்றம் செய்தது. இந்த மாற்றத்தின் அடிப்படையில், ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்கும்  முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக சர்ச்சையை எழுப்பி இருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநில உள்துறை … Read more