#BREAKING: மருத்துவமனையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆய்வு மேற்கொண்ட முதல்வர், உடல் சோர்வு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதை தொடர்ந்து, தலைமை செயலகம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தேர்தலில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment